செல்லக் குட்டிகளுக்கு பேலன்ஸ் பைக்ஸ்!!!
  • 13:05PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:05PM Nov 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

       உங்க செல்லக்குட்டிக்கு ஒன்றரை வயசாய்டுச்சா??? என்ன வாங்கிக் குடுக்கிறதுன்னு தெரியலையா??? அப்படின்னா இந்த பேலன்ஸ் பைக்ல ஒண்ணு வாங்கிக் குடுங்க.  அதென்ன பேலன்ஸ் பைக்னு உங்களுக்கு சுலபமா புரிய வைக்கனும்னா, பெடலே இல்லாத குழந்தைகள் சைக்கிள் தானுங்க அது.  என்னது பெடல் இல்லாத சைக்களை வச்சுகிட்டு பசங்க என்ன பண்ணுவாங்கன்னு கேட்டீங்கன்னா, உங்களுக்கு விஷயம் புரியலைன்னு அர்த்தம்.  சரி, உங்க பசங்க கிண்டர் கார்டன் ஸ்கூலுக்குப் போனா மோட்டார் ஸ்கில்ஸ்னு ஒண்ணு சொல்லிக் குடுப்பாங்க, அது என்னன்னு தெரியுமா??? அதாவது குழந்தைகளின் ப்ளெக்ஸிபிலிட்டி அவர்களை வெகு விரைவில் வலுப்பெற உதவும்.  ஆனா, அப்படி வலுப்பெறும் முன் கை, கால்களின் இயக்கம், விரல்களின் நெகிழும் தன்மை இதையெல்லாம் நாம சரிவர உறுதிப்படுத்திக்கனும்.  சில குழந்தைகள் காலை விரித்து தலையில் அப்படியே உட்காரும், சிலவற்றால் அப்படி முடியாது. 

       இந்தச் சைக்கிள் ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் எல்லாம் இல்லை.  சின்ன வயசுல நடை வண்டின்னு நாம பேலன்ஸ் பண்ணி நடக்கிறதுக்கு ஒரு மூணு சக்கர வண்டி வாங்கிக் கொடுத்தாங்களே, அதோட லேட்டஸ்ட் டெக்னாலஜிதான்.  என்ன இந்த வண்டிக்கு ரெண்டு சக்கரம்தான்.  இயற்கையாகவே ஜீன் வழி தகவல்களால குழந்தைகள் தங்களையறியாமலே வாகனங்கள், மொபைல் போன்றவற்றைச் சுலபமா கையாள ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது அவர்களுடைய ஜீன் பதிவுதான்.  அதன் அடிப்படையில, இந்த பைக்கை பார்த்ததுமே குழந்தைகள் அட்ராக்ட் ஆகிறது மட்டுமல்ல, சீக்கிரமே பயன்படுத்தவும் ஆரம்பிச்சுடறாங்க.

ஒன்றரை வயதிலிருந்து ஐந்து வயதுக்குள் இருக்கிற இந்த குழந்தைகள் சைக்கிளால, வெகு சீக்கிரமே அவங்களோட மோட்டார் ஸ்கில்ஸ் – உடம்போட ஒரு பாகம் பாக்கியில்லாம சரியாக சீரமைக்கப்படுகிறது.  கூடவே அவங்களோட பேலன்ஸ். இதனால, நாலு வயசுல சைக்கிள் ஓட்டுற அளவுக்கு இந்தக் குழந்தை ரெடியாகிடுது.  கால்களைத் தரையில ஊணிகிட்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதால, ஆரம்பத்துல பழகும் போது பேலன்ஸ் இல்லாம கீழே விழுந்திடும்னு பயம் தேவையில்லை. கொஞ்சம் நல்லா பழகின பிறகு குழந்தைகளே அது வேகமாகப் போகனும்னா என்ன பண்ணனும், அப்போ தரையில கால் படாம தூக்கிக் கொள்வது போன்றவற்றை அவங்களே செய்ய ஆரம்பிச்சுடறாங்க. அப்படியே பேலன்ஸ் பண்ணவும் பழகிக்கிறாங்க.

வெளிநாடுகள்ல இதுக்கு க்ளப் மாதிரி உருவாக்கி, விடுமுறை தினங்கள்ல குழந்தைகள் எல்லாத்தையும் பார்க்குக்கு கூட்டி வந்து விளையாட விடறாங்க.  இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் வந்து 2-3 வருஷமானாலும், இன்னமும் பெரிசா இதைப் பத்தி யாரும் கவலைப்பட்டதா தெரியலை.  காரணம் கேட்டா செம தமாஷா இருக்கும்.  குழந்தைகள் காலை எங்க வைக்கும்னு கேட்கிற பெற்றோர்கள்தான்.  காலை வைக்கிறதுக்கு இடம் கொடுத்தா இந்த சைக்கிளோட லாஜிக்கே அடிபட்ருமே.  இதன் தயாரிப்பாளர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதை வச்சு 5 வயசு விளையாடின, விளையாடிட்டிருக்கிற எந்தக் குழந்தையுமே, இதுல பெடல் எங்கே, காலை எங்கே வைக்கிறதுன்னு கேட்டதில்லை.  இயல்பாவே அவங்க காலை தூக்கிக் கொண்டு விளையாட ஆரம்பிச்சுடறாங்க. ஆனா, பெற்றோர்கள்ல இந்தக் கேள்வியைக் கேட்காத ஆளில்லை என்கிறார்கள்.  ஆனாலும் ரெண்டு மூன்று வாரம் குழந்தை விளையாடுவதைப் பார்த்தவர்கள் அந்தக் கேள்வியை மறுமுறை கேட்பதில்லை என்பது உண்மை. 

இதோட பயனை முழுசா நேரில பார்த்த பெரியவங்க சிலர், அவங்களுக்கும் இதே மாதிரி பைக் வேணும்னு கேட்டு, இப்போ இந்த கம்பெனி பெரியவங்களுக்கும் இதே மாதிரி பெடல் இல்லாத சைக்கிளைத் தயாரிச்சு வெளியிட்டிருக்கு. நேரில் இதன் செயல்பாட்டைப் பார்த்த பிறகுதான் எனக்கே நம்பிக்கை வந்தது. சீக்கிரம் மற்றவர்களுக்கும் வரும் என்று நம்புவோமாக.           

Top