கொலஸ்ட்ரால் எனும் மருத்துவ மோசடி!!!
  • 18:26PM Oct 10,2017 Bengaluru, Karnataka 560099, India
  • Written By KV
  • Written By KV
  • 18:26PM Oct 10,2017 Bengaluru, Karnataka 560099, India

நெடுங்காலமாய் கார்ப்பரேட் வணிகர்கள் நம்மை அச்சுறுத்தி வரப் பயன்பட்ட கொலஸ்ட்ரால் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.  அமெரிக்க அரசாங்கம் பெரிய போராட்டத்திற்குப் பிறகு, கொலஸ்ட்ரால் பற்றிய தங்களின் கருத்தினைத் தற்போது மாற்றிக் கொண்டுள்ளது.  1970 களில் இருந்து கொலஸ்ட்ரால் கேடு விளைவிக்கும் புரதமாகவும், இதய நோய்கள் மற்றும் இரத்த நாள அடைப்பிற்கான காரணம் என்றும் பரப்பப்பட்டு வந்த பொய்யை அவர்களாகவே மறுத்துள்ளனர். இதன்படி பார்த்தால், முட்டை, வெண்ணெய், கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் மற்றும் மாமிசம் ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய புரதம் (“Nutrients of Conern”) பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வேளாண் துறை, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் உணவுப் பொருள் குறித்தான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறது.  2015ல் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அது தெரிவித்தக் கருத்துகள் பின்வருமாறு, “கடந்த காலத்தில், அமெரிக்கர்களுக்கான ஊட்டச்சத்து விதிமுறைகளின்படி ஒருவர் ஒரு நாளைக்கு கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளின் நுகர்வை 300mg/day என்ற அளவிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.  ஆனால், 2015 ஆய்வு முடிவுகளின்படி DGAC – Dietary Guidelines Advisory Committee மீண்டும் அந்த ஆலோசனையைத் தராது.  காரணம், உணவின் மூலம் சேரும் கொலஸ்ட்ராலுக்கும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…” என்று பரிந்துரைத்துள்ளது.  இவர்கள் சோதனையை மேற்கொண்டது AHA/ACC (American Heart Association / American College of Cardiology) அமெரிக்க இதய நோய் கழகம் மற்றும் அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி (இதய நோய் இயல்)

       இப்படி ஒப்புக் கொண்டதன் மூலமாக, அதிக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை உண்பதற்கு எந்தத் தடையுமில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.  ஆனாலும், இவர்களின் பார்வை ஒரே ஒரு பொருளின் மீது மட்டும் இன்னமும் இருக்கிறது.  வெள்ளைச் சர்க்கரை.  அமெரிக்க இதயவியல் நிபுணர் Dr. ஸ்டீவன் நிஸன் இது குறித்துச் சொல்லும்போது, “வரவேற்கத்தக்க முடிவு, பல யுகங்களாக தவறாக பரப்பப்பட்டு வந்த ஒன்று இன்று வெளியே வந்துள்ளது.  நாம் அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உண்ணும் பொழுது, நமது உடல் குறைவாகத் தயாரித்தால் போதுமானது.  அவற்றைத் தவிர்க்கும் பொழுது, உடல் சோர்வடையத் துவங்குகிறது. 

       கொலஸ்ட்ரால் பற்றிய உண்மை இதோ.  நம் உடலில் தேவையான அதிகப்படி கொலஸ்ட்ராலைத் தயாரிப்பது நமது கல்லீரல்.  நமது மூளை கூடப் பெருமளவு கொலஸ்ட்ராலை உள்ளடக்கி இருக்கிறது.  நரம்பு மண்டலம் சீராக இயங்க, உடலுக்கு கொலஸ்ட்ரால் கண்டிப்பாகத் தேவை… நம் உடலுக்கு ஊட்டம் தரும் நிறையச் சுரப்பிகளுக்குக் கொலஸ்ட்ரால் தேவை. அவற்றில் மிக முக்கியமானவை (estrogen, testosterone and corticosteroids) எஸ்ட்ரோஜென், டெஸ்ட்டோஸ்டெரோன் மற்றும் கார்டிகோஸ்டெராய்ட்ஸ்.  சுருக்கமாகச் சொன்னால் அதிகக் கொலஸ்ட்ரால் உண்மையில் உடல், முக்கியமாக நமது கல்லீரல் நல்ல நிலைமையில் இருப்பதையே குறிக்கிறது” என்று சொல்கிறார்.

       நன்றாக இவர் சொல்வதைக் கவனியுங்கள்.  எஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டோஸ்டெரோன் ஆகிய இரண்டும் முறையே பெண் மற்றும் ஆணுக்கான தாம்பத்திய உறவுக்கான சுரப்பிகள்.  எஸ்ட்ரோஜென் சரியான அளவில் இருந்தால், பெண்ணுக்கான மாதவிடாய்ப் பிரச்சினைகள், பாலிசிஸ்டிக் ஓவரீஸ், மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.  ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டெரோன் ஆண்மைக்குறைவு, விரைப்பு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது.  ஆனால், குழந்தைப் பேற்றுக்காகச் செல்லும் போது மருத்துவர்கள் சொல்லும் முதல் விஷயமே கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்பதுதான்.  இதுவேதான் இன்று சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக, மகப்பேற்றினை ஒரு மிகப் பெரிய வணிகமாக மாற்றியிருக்கிறது.  ஒருவேளை மூளைக்கு அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேவைப்படும் காரணத்தினால், கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் செய்யும் பெண்கள் அல்லது ஆண்களின் பிள்ளைகளுக்கு ஆட்டிசம் போன்ற மூளைக் குறைபாடுகள் வருகின்றதோ என்னவோ??? பிரச்சினைகள் இல்லாத உடலில் பிரச்சினைகளை உருவாக்குவது போன்ற செயல்முறை இது. 

       மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட கார்டிகோஸ்டிராய்ட்ஸ் என்னவென்று Google செய்து பார்த்தபோது சற்று அதிர்ந்துதான் போனேன்.  காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவது, உடலின் சுறுசுறுப்பிற்கும், களைப்பில்லா செயல்பாடு, வேலைத் திறன் ஆகியவற்றிற்கான காரணியாகவும் அது விளங்குகிறது.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த மூன்று சுரப்பிகளும் ஒழுங்காகச் செயல்பட்டாலே நோயில்லா, நீண்ட ஆயுளைப் பெற முடியும்.

Dr. ஜார்ஜ் வி. மன், M.D., Associate Director of the Framingham study for the incidence and prevalence of cardiovascular disease (CVD) வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார். “கொழுப்பு மற்றும் பருமன் எந்த வகையிலும் இதய நோய்க்கான காரணிகளாக இருந்ததில்லை… கொலஸ்ட்ரால் கெட்டது என்ற நம்பிக்கைதான் எந்த நூற்றாண்டிலும் இல்லாத மருத்துவத் துறையின் மிகப் பெரிய ஊழல்… நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பதெல்லாம் ஏதுமில்லை.  ஆராய்ச்சிகள் கொலஸ்ட்ரால் மூலமாக இதய நோய்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வராது என்று நிரூபித்துள்ளன.  எனவே, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை மாற்றியமைப்பதற்கான முட்டாள்தனமான செயல்களில் இறங்க வேண்டாம்.  ஹார்ட் அட்டாக் வந்த பெரும்பாலானோருக்கு கொலஸ்ட்ரால் சாதாரண அளவிலேயே இருந்திருக்கிறது. 

       நமது உடலுக்கு நாள் ஒன்றுக்கு 950mg கொலஸ்ட்ரால் அவசியம்.  கல்லீரல் ஒன்றே இதனை உற்பத்தி செய்யும்.  நாம் உண்ணும் உணவிலிருந்து வெறும் 15% மட்டுமே உடலால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்பு குறைந்தால், நமது கல்லீரலுக்கு அதனை உற்பத்தி செய்ய அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.  LDL, HDL என்பதெல்லாம் வெறும் மாயை, கொலஸ்ட்ரால் உடலில் எங்கும் அடைப்பை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்படவில்லை.” என்று முடிக்கிறார்.  அப்படியென்றால், இத்தனை காலமாக இல்லாத வியாதியை கொலஸ்ட்ராலை ஒதுக்குவதன் மூலம் நாமே ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதே உண்மை.  க்ரீன் டீயில் ஆரம்பித்து நாம் தினமும் சாப்பிடும் மிட்டாய் வரை ஒட்டப்பட்டிருக்கும் லோ கொலஸ்ட்ரால் லேபிள்கள் உண்மையிலேயே நம் நெற்றியில் நாமே ஒட்டிக் கொண்ட முட்டாள் பட்டம்.  கார்ப்பரேட் வணிகம் என்றால் என்ன என்பதை இனியாவது மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

       சோ, இனிமேல் எவனாவது வந்து நம்மிடம் லோ-கார்ப், லோ-ஃபேட், லோ-கொலஸ்ட்ரால் என்று அளந்து விட்டால், அவன் கண் முன்னே அரைக் கிலோ டார்க் சாக்லேட் கேக் வாங்கித் தின்று காண்பியுங்கள்… கூடவே, இந்தப் பதிவையும்…

 

நன்றி  : வாஷிங்டன் போஸ்ட்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top