காதலனோ, காதலியோ இவற்றைச் சொன்னால் ஜாக்கிரதை!!!
 • 06:45AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 06:45AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

காதலனோ, காதலியோ இவற்றைச் சொன்னால் ஜாக்கிரதை!!!

              ஒவ்வொரு காதலிலும் பல்வேறு பருவங்கள் உண்டுபல்வேறு வகைகள் உண்டுஆனால், பெரும்பாலும் ஏதாவது ஒரு தரப்புகாதலன்/காதலி கொஞ்சம் மேனிப்புலேட்டிவ்வாக நடந்து கொள்வது வழக்கம்தான். ஆனால், உண்மைக் காதல் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நிறையக் காதல்கள் டோடல் மேனிபுலேஷன், அதாவது முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்ட பிறகு காணாமல் போவது, ப்ரேக் அப் ஆவது போன்றவற்றைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். ஸோ, ஜாக்கிரதையாக இருப்பது நம் பொறுப்புதான். அதிலும், எப்போதெல்லாம் இந்தக் கேள்விகள் எழுகிறதோ, அப்போதெல்லாம் உஷாராகி விடுங்கள்.

 1. என் மேல நம்பிக்கை இல்லையா, இல்லைன்னா வேண்டாம் இது ஒரு அப்பட்டமான எமோஷனல் பிளாக் மெயில்உண்மையைச் சொல்லப் போனால், லாங் டிரைவ், ஓவர் நைட் ஸ்டே, உடலுறவு, நிர்வாண போட்டோக்கள் என அத்தனை அட்டூழியங்களுக்கும் முன்னால் இருப்பது இந்தக் கேள்விதான். ஸோ, உஷார்.
 2. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் பெரும்பாலும், இது ஒன்றுமில்லாத ஒரு சஸ்பென்ஸ் கிஃப்டாக இருக்கக்கூடும்இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் ஆண்கள் வேறு பெண்ணுடன் தனக்கு அஃபேர் இருப்பது, வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்தது, ப்ரேக் அப் நியூஸ் போன்றவற்றை வெளிப்படுத்தும் முன் ஏற்படும் தயக்கத்தினால் வரும் டயலாக் இது.
 3. ஜஸ்ட் நீட் டூ பிலீவ் மீ பேபி பெண்கள் இதனைச் சொல்லும் போது, அவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று பொருள். காரணம், பெண்கள் தங்களை ஆண்கள் நம்பாததை அவ்வளவு எளிதில் ஜீரணிக்கக் கூடியவர்கள் இல்லைஅதையும் தாண்டி என்னை நம்பு என்று அவர்கள் கேட்கும் பட்சத்தில் நிச்சயம் அந்தப் பெண் ஏதோ தவறு செய்திருக்கிறாள் என்று எடுத்துக் கொள்ளலாம்இந்த வரிக்குப் பிறகு சொல்பவை பெரும்பாலும் அவர்களே நம்பாத பொய்களாகத்தான் இருக்கும்.
 4. ச்சீச்சீ!!! இப்படியெல்லாமா நடக்குது? Yuk!!! இதுதான் நிஜமான பொய்இதன் உண்மையான அர்த்தம் அப்படியே நேர் எதிர்அப்படியா, இன்னும் கொஞ்சம் சொல்லு அதைப்பத்தி என்பதன் எதிர்மறை வெளிப்பாடு இந்த வரி
 5. உன்னை மாதிரி மோசமான ஆளு உலகத்துலயே இருக்க முடியாது இந்த டயலாக் விளையாட்டு மாதிரி பேசினால் நீங்கள் அதற்கு முன் செய்த செய்கை அவளுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று பொருள்இதே கொஞ்சம் சீரியஸாக வந்தால், கழட்டி விடப்படுவீர்கள், ஜாக்கிரதை.
 6. எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்குறாங்க…. இது ஒரு ஸ்ட்ரெய்ட் எவே வார்னிங்நீங்கள் தேவையில்லாமல் அதிக நேரத்தை வீணடிக்காமல் செட்டிலாக வேண்டும் என்று சொல்வதுஇதை அசால்ட்டாக எடுத்துக் கொண்டால், வீட்டில் நிச்சயம் மாப்பிள்ளை பார்த்து விடுவார்கள்.
 7. கேன் யூ டு சம்திங் ஃபார் மீ உன்னால் முடியாத எதோ ஒன்றைக் கேட்கப் போகிறாள் என்று அர்த்தம்இல்லை பெரிதாக ஏதோ ஒன்றில் கோர்த்து விடப் போகிறாள் என்று அர்த்தம்பெரும்பாலும், இந்த வார்த்தைகள் லாஸ்ட் மீட்டிங்கில்தான் அதிகமாகப் பேசப் பட்டிருக்கிறதுஇனிமே பார்க்க வராத போன்ற பல விஷயங்கள் இதன் பின்னேதான் சொல்லப்பட்டிருக்கிறது.
 8. எனக்கு என்னடா தெரியும் எல்லாமே தெரியும் என்பதன் பெண் மொழி இதுஇதன் பிறகு பிரச்சினை பற்றி பேசினால், மரியாதையாக உண்மையைச் சொல்லி விடுவது நல்லது
 9. ஃபார் செகண்ட், தாட் ஹி ஈஸ் பெட்டர் தன் யூ வேறொரு ஆண் மீது தங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதென்பதைப் பெண்கள் சொல்லும் விதமே இதுதான்உங்களுடன் வேறொருவரைக் கம்பேர் செய்வது, உங்களுக்கோ, உங்கள் காதலுக்கோ நிச்சயம் நல்லதல்ல.

இப்படிப் பலவாறான விஷயங்களை நாம் முன்னே சொல்லப்படம் குறியீடுகள் மூலமாகவே புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள முடியாவிட்டால் கஷ்டம்தான்எல்லாம் சரி, ஒரு வேளை கழட்டிவிட்டால் என்ன செய்வதென்று கேட்கிறீர்களா???  கடந்து போய் விடுங்கள்என் வாழ்க்கையில் என்னை ஒதுக்கிய பல பெண்கள், பின்னாளில் அது தவறென்று தாங்களாகவே என்னிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்என்னைப் பொறுத்தவரை ஒரே விஷயம்தான்

ஒரு உண்மைக் காதலுக்காகநூறு

மரணங்களைச் சந்திக்கலாம்...

ஆனால்

காதல் என்ற ஒற்றை வார்த்தைக்காகச்

சிந்தும் ஒரு கண்ணீர்த்துளி கூட-

அர்த்தமற்றது…”            - கேவி -       

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top