உங்கள் அடையாளம் பத்திரமாக உள்ளதா - RFID திருடர்கள் ஜாக்கிரதை!!!
  • 07:41AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:41AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

Radio Frequency Identification என்பதன் சுருக்கமே RFID.  தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் பாதகம் - தகவல் திருட்டு.  உங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்ட எவர் வேண்டுமானாலும், உங்கள் வங்கிக் கணக்கு உட்பட - அவர்களது தேவைக்கேற்ப உபயோகித்துக் கொள்ள முடியும்.  நேற்றுவரை இந்தத் திருட்டுகள் ATM-லிருந்து பணம் எடுக்கும் போது Skimmer, Pinhole Camera போன்றவற்றின் மூலம் மட்டுமே நடைபெற்று வந்தது.  இந்த RFID தொழில்நுட்பம் மூலம், உங்கள் கார்டை பர்ஸிலிருந்து வெளியே எடுக்காமலே உங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் திருடிவிட முடியும்.

எப்படி?

RFID Chip பதிந்த எந்தவொரு கார்டையும், RFID Scanner-களால் படிக்க முடியும்.  உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்ற படம் இருப்பின், அது RFID Chip பொருத்தப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.  ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் அனைத்து கார்டுகளையும் இந்த ஸ்கேனர்கள் படித்து, காப்பி எடுத்துவிட முடியும்.  மேலைநாடுகளில், Driving License முதல் பாஸ்போர்ட் வரை அனைத்துமே இந்த சிப் பொருத்தப்பட்டதுதான். நல்லவேளை, இந்தியாவில் அப்படி இல்லை என்று சந்தோஷப்பட முடியாது. ஏனெனில், இந்த RFID தொழில்நுட்பத்தினை இன்று கணினி மென்பொருள் நிறுவனங்கள் துவங்கி, ஓரளவு பெயர் சொல்லக் கூடிய நிறுவனங்கள் வரை அடையாள அட்டைகளாக வழங்கி உள்ளது. 

இந்த அடையாள அட்டைகள் கொண்டுள்ள விஷயங்களைச் சற்றே கவனித்தால் நிலைமையின் தீவிரம் புரியும். ஒரு பணியாளரின் பெயர், முகவரி இவற்றில் ஆரம்பித்து வங்கிக் கணக்கு, சம்பள தேதி வரை தகவல்களை அடக்கி இருக்கும்.  இப்பொழுது உங்கள் வங்கிக் கணக்கையோ அல்லது அடையாளத்தையோ, யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள RFID Wallets, Covers என விற்க ஆரம்பித்திருந்தாலும், அவை உண்மையிலேயே உபயோகமாக உள்ளதா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

எதற்கும் நாம் விழிப்போடு இருப்பது நமக்கு நல்லது. மீண்டும் செல்கிறேன் – RFID திருடர்கள் ஜாக்கிரதை!!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top