அஸாஸின் க்ரீட் – ஆரிஜின்ஸ்
  • 09:12AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:12AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

பயங்கர பரபரப்புக்கு நடுவுல, வர்ற அக்டாபர் 27ம் தேதி வெளியாக இருக்கும் அஸாஸின்ஸ் க்ரீட் – ஆரிஜின்ஸ் பத்தி ஒரு சின்ன பார்வை.  Ubisoft நிறுவனம் வெளியிட இருக்கிற இந்த வீடியோ கேம் ட்ரெய்லரே ஒரு மாஸ் பட ரேஞ்சுக்கு இருக்கு. Real Life Graphics, Open Earth Gameplay - இரண்டும் சேர்ந்து விளையாட்டுக்கு நடுவுல கொஞ்சம் பிரீயா இருந்தா, எகிப்து எப்படி இருக்குன்னு பார்க்கிறதுக்கும் வசதியா இருக்கு… நடந்தோ, குதிரை மேலயோ, ஒட்டகத்து மேலயோ, படகுலயோ கூட சுத்திப் பார்க்க முடியும். தொடர்ந்து 9 sequel வெளிவந்தாலும், ஒவ்வொரு தடவையும் வேற கதை, வேற இடம்னு மாறுவதால - இந்த தடவை ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கு.

கதைப்படி நம்ம ஹீரோ, (அட நாமதாங்க!!!) இந்த வாட்டி ஒரு மெட்ஜாய்-னு அழைக்கப்படுற எகிப்து வீரரா வர்றார்.  அதுக்கு மேல, வழக்கமான தாவல், சண்டை, கொடூர மிருகங்கள் இப்படின்னு கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாம போகுது.  சில இடங்கள்ல பாகுபலி பார்க்கும்போது நமக்கு ஒரு ஃபீல் வந்துச்சு இல்லை, அத மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கிறது நிஜமாவே செம… இதுக்கு மேல விவரிச்சா, கேம் சுவாரஸ்யம் கொறஞ்சிடும்கறதால நீங்க விளையாடித் தெரிஞ்சுக்கோங்க.

மைக்ராசாப்ட் விண்டோஸ், ப்ளே ஸ்டேஷன் 4, X-Box One - இதில ஏதாவது ஒண்ணு குறைந்தபட்சம் இருந்தாதான் இந்த கேமை விளையாடக் கூட முடியும்.  வழக்கமா இருக்கிற மல்ட்டிப்ளேயர் option இல்லாததால, விறுவிறுப்பு இன்னும்கூட தூக்கலா இருக்கும். WAITING!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top