#TRADITIONALRECIPE: அரிசியில் CUTLET செய்வது எப்படி??? மொறுமொறுவென்று சுவையான CUTLET RECIPE!!!
  • 20:36PM Nov 29,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:36PM Nov 29,2019 Chennai

அநேகமாக நாம் அனைவரும் TRADITIONAL FOOD VARIETY-யைத் தாண்டி முதலில் சுவைத்தது CUTLET ஆகத்தான் இருக்கும். பிரியாணி எல்லாம் கூட TRADITIONAL ஆகும் போது, CUTLET மட்டும் ஏன் ஆகக்கூடாது??? கிட்டத்தட்ட நமக்கு நன்கு தெரிந்த நாளிலிருந்தே CUTLET நமக்கு அறிமுகமான ஒன்றுதான். இன்று பாதிக்கும் மேற்பட்ட திருமணங்களிலும் கூட CUTLET இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்ட CUTLET செய்வது எப்படி என்று பார்க்கலாமா???

cutlet.jpg

#1. தேவையான பொருட்கள்: சாதம் – 1 CUP, வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து மசித்துக் கொள்ளவும்), காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத்தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) – 1 CUP, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி - 2 TABLE SPOON, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த் தூள் - 1/4  TABLE SPOON, கொத்தமல்லி இலை – 2.

#2. ஒரு BOWL-ல் எண்ணெய்யைத் தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கலக்க வேண்டும். கையை வைத்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

#3. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

#4. ஒரு தட்டில் சிறிது மாவைத் தூவி விட வேண்டும்.இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையைக் கொண்டு உருட்டி, தட்டையாக CUTLET வடிவத்தில் தட்ட வேண்டும்.

#5. TIKKIS என்று அழைக்கப்படும் இவற்றை, மாவு தூவப்பட்ட தட்டில் வைத்துக் கொள்ளவும்.

#6. அடுப்பைப் பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் மிதமாகச் சூடானதும் TIKKIS-ஐ ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரிக்க வேண்டும்.

#7. TIKKIS நன்றாகப் பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

#8. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிஞ்ச PAPER விரித்துக் கொள்ளுங்கள்.

#9. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Oats Fruit Salad  |  Flax Seed Idli Podi  |  Kambu Dosai  |  Broken Wheat Payasam  |  Paruthipaal  |

#TRADITIONALRECIPE இல்லாவிட்டாலும், இதன் சுவை நம்மை ரொம்பவே கட்டுப்படுத்திவிட்டதால் இதில் இந்த RECIPE-யைப் பகிர்ந்திருக்கிறோம். இந்த CUTLET உடன் SAUCE அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டுச் சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும். வறுத்த பொரி கடலை மாவைப் பயன்படுத்தினாலும் கூட CUTLET நன்றாக வரும். சுவையாக மணமாக CUTLET இருக்க வேண்டும் என்று நினைத்தால், பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும். அப்புறம் என்ன, CUTLET உடன் இன்று மாலை கொண்டாட்டம்தானே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top