#kuldhara ராஜஸ்தானின் பேய் கிராமத்தில் தீரன் திரைப்பட இரவு காட்சிகளை எப்படி எடுத்தனர்?
  • 19:53PM Nov 29,2019 Kuldhara
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:53PM Nov 29,2019 Kuldhara

கார்த்தி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகிய தீரன் திரைப்படம் அந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாகக் கருதப்பட்டது. உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தீரன் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படமெடுக்கப்பட்டாலும் ராஜஸ்தானில் அதிகமாகப் படமாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் முக்கியக் கடைசிக் காட்சிகள் சில ராஜஸ்தானின் பேய் கிராமத்தில் எடுக்கப்பட்டது. இரவில் பேய் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்று கூறப்படும் இடத்தில் தான் இந்தச் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டன. அதுவும் இரவு நேரத்திலேயே! அப்போது அந்த இடத்தில் பேய் இல்லையா?

#ElephantHill: மதுரையிலுள்ள யானை மலையில் யாராலும் அறியப்படாத ஒரு அதிசியம்! வாய்ப்பு இருந்தால் நீங்களே நேரில் சென்று பாருங்கள்!

Image result for kuldhara

இந்தக் கிராமத்தின் பெயர் kuldhara. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் இந்தக் கிராமம் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்தக் கிராமத்தை பேய் கிராமம் என்றே அழைக்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் நகரமாக உருவாகிய இந்தக் கிராமம், 19-ம் நூற்றாண்டில் பேய் கிராமமாக மாறிவிட்டது. இங்குக் கடைசியாக வாழ்ந்த 500 குடும்பங்கள் ஒரே நாள் இரவில் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதற்குச் சில அமானுஷ்ய காரணங்கள் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தின் நடுவே ஒரு அம்மன் கோயில் உள்ளது. இந்த ஊர் மக்கள் அந்த அம்மனுக்கு தெய்வக்குற்றம் செய்ததால், சாமி ஊரை விட்டு வெளியேறியதாகவும், அதன்பின் பேய்கள் இந்த ஊருக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தினமும் ஏற்பட்ட பேய் பயத்தால் இந்த ஊரை விட்டு மக்கள் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

Related image

ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த ஆற்று வறண்டு விட்டதால் நீர் தேவையின் காரணமாக இந்தக் கிராமமக்கள் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, பெரும்பாலானோர் இங்குப் பேய் நடமாட்டம் இருப்பதாகவே நம்புகின்றனர். இங்குப் பேய் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி சிலர் இரவில் தங்கியுள்ளனர், ஆனால் அவர்கள் மறுநாள் பேய் நடமாட்டம் இருந்ததாக ஒப்புக்கொண்டு அலறியடித்து ஒட்டியுள்ளனர். இதனால் இங்குச் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது. வேறு வழியின்றி அம்மாநில அரசே இதனைச் சுற்றுலா தளமாக அறிவித்து அதற்குப் பாதுகாப்பும் கொடுத்தது. மேலும் இரவு நேரத்தில் இங்குத் தங்கவேண்டும் என்றால் அரசு உரிமை பெறவேண்டும் என்றும் கூறியது. அரசு உரிமை மற்றும் பாதுகாப்பு பெற்று தான் திறன் திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது. இரவு காட்சிகளை அதிக மக்கள் சுற்றி இருக்கும்போது தான் எடுத்துள்ளனராம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top