#Gold : நம்மிடம் உள்ள தங்கம் குறையாமல் இருக்க தாந்த்ரீக முறை !!!
  • 11:27AM Dec 03,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:27AM Dec 03,2019 Tamil Nadu

அந்த காலம் முதல் தற்பொழுது வரை மனிதனின் தேடல் பெரும்பாலும் தங்கத்தை நோக்கியே உள்ளது, பெண்களுக்கு மட்டுமல்ல தங்கத்தின் மீது ஆண்களுக்கும் ஆசை அதிகம் தான் ,அதற்கான பல சான்றுகள் வரலாற்றில் உள்ளன,ஏன் தங்கத்திற்காக பல போர்கள் கூட நடந்துள்ளன,தற்பொழுது நடுத்தர குடும்பத்தின் முக்கிய முதலீடே தங்கத்தில் தான் உள்ளது, ஆனால் அந்த நகைகள் அவசர தேவைக்காக அடகுக்கு சென்று இருக்கும். இல்லை என்றால் எதாவது தொழிலுக்கு பயன்படுத்தி அந்த தங்க நகைகளை மீட்க்கமால்  விற்றுவிடுவார்கள். அவ்வாறு நடக்காமல் இருக்க மேலும் நகைகள் சேர இந்த வழிபட்டு முறையை பின் பற்றலாம்.

jewls 1.jpg

முதலில் பலசரக்கு கடைகள் அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் பச்சை கற்பூரம், வாங்கிவைத்து கொள்ளுங்கள். இது மற்ற கற்பூரங்களை விட   விலை உயர்வாக இருக்கும். அதனால் சிறிதளவு இருந்தாலே போதும். பிறகு துளசி இலை இரண்டு, கிராம்பு இரண்டு இவற்றை ஒரு செப்பு பௌலில் வைத்து நகை இருக்கும் இடத்திற்கு அருகில் வையுங்கள். துளசி இலை காய்ந்த பிறகு மீண்டும் இலை போட்டு வையுங்கள்.இந்த பொருட்கள் எல்லாம் லட்சுமி தேவிக்கு உகந்தது ஆகும். அதனால் இந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் செல்வம் குறையாமல் இருக்கும்.அதாவது இருக்கும் தங்கம் குறையாமல் இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top