#Nasa: நாசா விண்வெளி மையத்தில் தஞ்சாவூர் மாணவர்கள் - தொடர் சாதனை படைக்கும் தமிழகம்!
  • 11:19AM Dec 03,2019 NASA Kennedy Space Center Fire Rescue Station #2
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:19AM Dec 03,2019 NASA Kennedy Space Center Fire Rescue Station #2

அமெரிக்காவிற்கு கல்விச்சுற்றுலா சென்றுள்ள பிரில்லியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் “NASA” விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரில்லியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக, 7 நாட்கள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA-விற்கு, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குள்ள NASA விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்களுக்கான பயண பயிற்சி மற்றும் சிமிலேட்டர்  மூலமாக ராக்கெட் ஏவுதல் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், விண்வெளி குறித்த சோதனைகள், விண்வெளி வீரராவதற்கு முறையாக அளிக்கப்படும் பயிற்சி, செயற்கைக்கோளை எப்படி கட்டுப்படுத்தி இயக்குவது? மேலும் அது எப்படி இயக்கப்படுகிறது? அடுத்து ரோபோ தொழில் நுட்பம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிக்கொடுக்கப்பட்டது.

மேலும், நிலவுக்கு சென்று வந்துள்ள Apollo மற்றும் Saturn V ராக்கெட் ஆகியவற்றை நேரடியாக பார்த்தனர். அதனை தொடர்ந்து ராக்கெட் மாதிரி செய்து பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் orlando disney பூங்காவிற்கு சென்று வந்தனர். பயண முடிவில் miami universityயை பார்வையிட்டனர். விண்வெளி மையம் தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி முதலிடம் பெற்றதால் NASA விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. | Shivangi இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாகப் பதவியேற்ற பீகார் பெண்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top