#Beer : உடல் வலிக்கு பீர் நல்லதா ?
  • 11:14AM Nov 27,2019 London
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:14AM Nov 27,2019 London

மதுவின் ஆரம்பமே பீர் தான் அதாவது பெரும்பாலானோர் முதலில் மது குடிக்க ஆரம்பிப்பவர்கள் பீரில் இருந்து தான் தொடங்குகிறார்கள்,இதற்கு பல காரணங்களை சொல்லுவார்கள் நம்ம ஊரில் பீர் ஒரு குளிர்பானம் போன்றது என்று ஒரு தோற்றத்தை உருவாகிவிட்டார்கள்,சரி நாம் இந்த கட்டுரைக்கு வருவோம் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகம் மிக வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தியது.அது என்னவென்றால் உடல் வலிக்கு பீர் நல்லதா ?என்பதே அது.

beer 1.jpg

இதற்க்காக இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள  ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் 18 விதமான ஆய்வுகளை நடத்தினர். அதில் ஒரு ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர் அருந்தினால் அது வலி நிவாரணி மாத்திரையான  பாராசிடாமலை விட நல்ல நிவாரணம் அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். உடனே பீரை தொடர்ச்சியாக குடிக்க ஆரம்பித்து விடாதீர்கள் ! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தொடர்ச்சியாக பீர் குடித்தால்   அது உடல் ஆரோக்யத்துக்கு தீங்காகும் எனவும் அறிவித்துள்ளனர். பீர் குடிப்பதின் மூலம் நம் உடலின் வலிதாங்கும் சக்தியை உயர்த்த முடியும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது .

beer.jpg

ஆனால் உடல் வலி என்ற காரணத்திற்காக பீர் குடிக்க ஆரம்பித்து பிறகு அதுவே உங்கள் வாழ்க்கையில் மது இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையில் கொண்டு போய் விடுவதை விட, மது குடிக்காமல் இருப்பது நல்லது,உணவுகளிலேயே சிறந்த வலி நிவாரணி உண்டு,நன்றாக அந்த உணவுகளை சாப்பிட்டு ஓய்வு எடுத்தாலே உடல் வலி நீங்கி உற்சாகமாகலாம் ,மது என்றைக்குமே நாட்டும் வீட்டுக்கும் ஏன் உங்கள் உயிருக்கும் கெடுதியாகும்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top