இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் PRIYANKA REDDY. இரண்டு மூன்று நாட்களா என்று கேட்கிறீர்களா??? உண்மையைச் சொன்னால் வருடக்கணக்கில் பேசப்படும் விஷயம்தான். ஆனால், பெயர் வயது மட்டும்தான் மாறிக் கொண்டே இருக்கிறது. வக்கிரம் பிடித்த ஆண்களால், குறி வைத்து இரையாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர். இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. இவரின் கருகிய உடல் கிடைத்த கொஞ்ச தூரத்திலேயே அதே போல எரிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் உடலும் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். இது குற்றவாளிகளுக்கு HABITUAL CRIME என்ற கோணத்தில் யாரும் விசாரிக்கக் கூடப் போவதில்லை. காரணம், அவர்களுக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. குற்றவாளிகளில் ஒருவன் முஸ்லிம். COMMUNAL ANGLE கிடைத்த பிறகு இரண்டாவது சடலத்தைப் பற்றி யாருக்கென்ன அக்கறை???
அப்படியே திரும்பி மக்களைப் பார்ப்போம். அதிகபட்சம் 10 நாள் SOCIAL MEDIA-வில் HANG THE RAPISTS என்ற HASHTAG ஓடும். பிறகு, அடுத்த பிரச்சினை அடுத்த HASHTAG என்று போய்விடுவார்கள். உலகிலேயே ECONOMIC CRISIS பற்றிக் கவலைப்படாத மக்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும். அது வேறு கதை. ஆனால், இத்தனை சமூகக் கோபம் இருக்கும் நபர்களிடம், வீட்டில் பெண்களும் மனுஷிதான். நம்மைப் போலவே அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது, வலிக்கும். என்று சொல்லிப் பாருங்களேன். அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பார்கள். பிள்ளைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வருடக்கணக்குத் தேவையில்லை. பேசக் கூடத் தேவையில்லை. நம் மனைவியிடம் நாம் நடந்து கொள்வதை வைத்தே குழந்தைகள் கற்றுக் கொள்ளும். அதோடு, சட்டம் என்ன செய்கிறது என்பதையும் அவர்கள் கவனிக்கத்தான் செய்கிறார்கள். கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டு, RAPE வழக்குகள் மொத்தமும் GANG RAPE AND MURDER வழக்குகளாக மாறிவிட்டது. மரண தண்டனையை விடக் கடுமையான சட்டம் என்ன இருக்கிறது???
விஷயம் சட்டமல்ல, நீதியின் பேரில் உள்ள பயம். இதைத் தக்க வைக்க எந்த நாடுகள் என்ன செய்கிறது என்று பாருங்கள். UAE – ஏழு நாளில் தூக்குத் தண்டனை, ஈரான், ஈராக் – கல்லால் அடித்துக் கொலை, AFGHANISTHAN – துப்பாக்கியால் சுட்டுக் கொலை, சீனா – மருத்துவ சோதனையில் நிரூபிக்கப்பட்டால் உடனடி மரணம், மலேசியா – மரண தண்டனை, மங்கோலியா – பெண் வீட்டார் விருப்பப்படும் தண்டனை, தாலிபான் – துண்டு துண்டாக வெட்டிப் போடுதல், போலந்து – கொன்று பன்றிகளுக்கு உணவாக போடுவது. சரி, அப்படியே இந்தியாவில் திரும்பிப் பார்த்தால், MINOR ஆக இருந்தால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, விடுதலையாகும் போது வாழ்வாதாரத்துக்குத் தையல் MACHINE. MINORITY-யாக இருந்தால், ஏழு நாளில் தூக்கு, இல்லாவிட்டால் வாய்தா வாய்தாவாக வழக்கு. கொஞ்சம் பணபலம் அரசியல் பலம் இருந்தால், கொடி பிடித்து ஊர்வலம் கூட ஆதரவாகப் போவார்கள். இப்படி இருந்தால் யாருக்குத்தான் பயம் வரும்??? ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். இன்று ஆதரவாக இருக்கும் அனைவரின் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். வக்கிரம் பிடித்தவர்கள் அதிகமானால், தேவை ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலை மட்டுமே. நாளை உங்கள் வீட்டில் நடக்கும் போதும், இதுதான் உங்களுக்கும் நியாயம் என்று கிடைக்கும். இனியாவது அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்வோமா???
| Consensual Sex | Womens Gun License | Pollachi Rapists | Murder After Pocso Act | Women Liberty |