#PRICEHIKE: வானைத் தொடும் வெங்காய விலை!!! கிலோ நூறு ரூபாயைத் தாண்டிச் செல்லும் அவலம்!!!
  • 13:20PM Nov 29,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 13:20PM Nov 29,2019 Chennai

வெங்காயம் போடாமல் சமையல் செய்வதென்றால் எத்தனை ITEM-களைச் செய்ய முடியும் என்று யோசித்தாலே வெங்காயத்தின் அருமை என்னவென்று நமக்குத் தெரிந்துவிடும். சின்ன வெங்காயத்தை வைத்துப் பொடுகு நீக்கும் SHAMPOO என்று தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். நடுத்தர மக்களின் அன்றாடத் தேவையான வெங்காயம் இல்லாவிட்டால், நிச்சயம் அவர்களால் சமாளிக்க முடியாது. அதுவும், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்கு அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாடு, டெல்லி, மும்பை என நாட்டின் பல பகுதிகளில் கிலோ நூறு ரூபாய்க்கும் அதிகமாக வெங்காய விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

onion0.jpg

சட்ட விரோதமாக வெங்காயம் பதுக்கப்படுவதன் காரணமாகவும், கடந்த சில மாதங்களாப் பெய்த கனமழையின் காரணமாகவும் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். NATIONAL AGRICULTURAL COOPERATIVE TRADE ASSOCIATION-ம் வெங்காயத்தைக் கிடங்குகளில் பாதுகாப்பதில் பாரம்பரியமான முறையையே பின்பற்றுவதால் சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் பெரும்பகுதி வீணாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட அதன் விலை குறைந்தபாடில்லை. அப்படி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை எப்படித் தீரும் என்று யாரும் கேட்பதுமில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம்.  

onion1.jpg

ஏற்றுமதிக்குத் தடை விதித்ததைப் போலவே, வெங்காயம் இருப்பு வைக்கவும் காலவரையறையற்ற தடையை மத்திய அரசு விதித்துள்ளது. விலையைஙக கட்டுப்படுத்த 1.2 லட்சம் TON IMPORT செய்யப்படும் என மத்திய அமைச்சர் RAMVILAS PASWAN தெரிவித்துள்ளார்.  இதன்படி சில்லறை வியாபாரிகள் 100 QUINTOL-க்கு மேலும், மொத்த வியாபாரிகள் 500 KILO-வுக்கு மேலும் இருப்பு வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரி, IMPORT செய்யப்படும் வெங்காயம் எப்போதுதான் வரும் என்று கேட்கிறீர்களா??? MMDC மூலம், EGYPT-ல் இருந்து IMPORT செய்யப்படும் 6,090 TON வெங்காயம், அடுத்த மாதம் 2-வது வாரத்தில்தான் வந்து சேரும் என எதிர்பார்க்கிறார்களாம். அதுவரை???

Onion Raid  |  Onion Health Benefits  |  Spring Onion Benefits  |  Onion Juice Benefits  |  BJP Onions  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top