#Cycle மூங்கில் குச்சிகளால் செய்த 10 அடி உயர சைக்கிள்! குவியும் பாராட்டுகள்!
  • 20:10PM Dec 02,2019 Malaysia
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:10PM Dec 02,2019 Malaysia

வித்தியாசமான திறன்களைக் கொண்ட அனைவரது முயற்சியும் இணையத்தில் பல பாராட்டுகளைப் பெற்று வரவேற்கப்படும். அந்த வகையில் தற்போது மூங்கில் குச்சிகளால் 10 அடி உயர சைக்கிளை வடிவமைத்த வாலிபருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மலேசிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஒரு சைக்கிளை வடிவமைத்துள்ளார். சைக்கிளின் டயர் மற்றும் ஹாண்டில் பார் இடையே இரும்பை பயன்படுத்தாமல் வெறும் மூங்கிலை மட்டுமே வைத்து உருவாகியுள்ளான். ஆனால் இந்தச் சைக்கிளின் உயரம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மூங்கில் கொம்புகளை வைத்து சுமார் 10 அடி உயரத்திற்கு வாடிவமைத்துள்ளான். உயரமான சைக்கிள்களில் பேலன்ஸ் செய்வது என்பது கடினமான விஷயம், ஆனால் இந்த வாலிபர் அந்த உயரமான சைக்கிளை அழகாகப் பேலன்ஸ் செய்து ஒட்டியுள்ளார்.

#Jeans ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்டை திருட முயன்ற பெண் - வைரல் வீடியோ!

Man Creates 10 Feet Tall Bamboo Cycle

சைக்கிளை உருவாக்கி அதைத் திறம்பட இந்த வாலிபர் ஓட்டும் வீடியோ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ ட்விட்டரில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. இது பழைய வீடியோ என்று சிலர் கூறி வந்தாலும் தற்போது இணையத்தில் இது வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top