#sos: நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது? இந்த விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க!
  • 13:13PM Dec 02,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:13PM Dec 02,2019 Tamil Nadu

ஐதராபாத்தில் பெண் டாக்டர், ராஜஸ்தானில் பள்ளி மாணவி என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து எப்படி முடிந்த அளவுக்கு தப்பிக்கலாம் என்பது குறித்து காவல் துறை அதிகாரி தன்னால் இயன்ற வழிமுறைகளை கூறியுள்ளார். தப்பு நடந்து முடிந்த பின் போலீஸ் வரும் என்று எல்லாரும் சொல்வதை போல சொல்லாமல், அந்த நேரத்தில் உயிரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தால், தப்பு செய்ய முயற்சி செய்பவனுக்கு பயம் வந்து கூட தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது? ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் காவல்துறைக்கு High priority duty". முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும். அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும். சரி, பேச முடியாத சூழல் துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணகள் ஸ்டோர் பண்லாம். 

இந்த ஆப்-பை ஓப்பன் பண்ணினா... டிஸ்ப்ளேவோட சென்டர்ல, சிவப்பு நிறத்துல ரவுண்டா ஒரு பொத்தான் தெரியும். அதுல SOS-னு பெரிசா எழுதியிருக்கும். ஆபத்து காலங்கள்ல இத நீங்க ப்ரஸ் பண்ணும்போது உங்க சொந்தங்களுக்கு மட்டுமில்ல, கண்ட்ரோல் ரூம், மாவட்ட கண்ட்ரோல் ரூம், உங்களுக்கு பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹைவே பேட்ரோல், பைக் பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்கனு 15 நொடிகளுக்குள்ள மெசெஜ் போகும். அது மட்டுமில்ல, இது GPS வழிகாட்டல்ல இயங்குது. ஆபத்துல இருக்குறவங்கள டிராக் பண்ணி, போலீஸ்... ஸ்பாட்டுக்கு போகமுடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். 

இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல. களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும். அதனால பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான் என்று கூறியுள்ளார்.  | Adulthood: அதிகப்படியான பாலியல் சிந்தனைகளைக் குறைத்துக் கொள்வது எப்படி? தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top