#joboffer: எழுத்து தேர்வின்றி பணி நியமனம்! அடிப்படை கணினி அறிவு இருந்தாலே போதுமாம்!
  • 14:03PM Dec 02,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:03PM Dec 02,2019 Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின்(Ministry of Human Resource Development) கீழ்  செயல்பட்டு வரும் காந்திகிராம் யூனிவர்சிட்டியில்  காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர்,டேட்டா என்ட்ரி பணி  உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி தொடர்பான விபரங்கள் பின்வருமாறு, 

#1. ஆராய்ச்சி அதிகாரி பணிக்கு கல்வித்தகுதியாக சமூக அறிவியல் பிரிவில் post graduation பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது. இதற்கான ஊதியமாக மாதம் ரூ.12,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

#2.  உதவி ஆராச்சியாளர் பணிக்கு  கல்வித்தகுதியாக ஏதேனும் ஓர் பிரிவில் under graduation பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அடிப்படை அறிவு மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது.

#3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு  ஏதேனும் ஓர் பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.மேலும் கணினி அறிவு,தட்டச்சு அறிவு பெற்றிருக்க வேண்டும்.   

#4.  நேர்முகத் தேர்வில் பெறும்  மதிப்பெண்கள்  அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதியானது 11.12.2019 ஆகும்

#5.  விருப்பம்  உள்ளவர்கள் www.ruraluniv.ac.in எனும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று வயதுவரம்பு மற்றும் பணி தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.  

#joboffer,  மேலும் தொடர்பு  கொள்ள வேண்டிய முகவரி பின்வருமாறு,  Dr. L.RAJA Project Director, Situation Analysis on Child Marriage in Dindigul District Centre for Lifelong Learning The Gandhigram Rural Institute (Deemed to be University) Gandhigram - 624 302, Tamil Nadu. #tnpsc: அடுத்த வாய்ப்பு வெளியானது! TNPSC அஸ்பிரன்ட்ஸ் அலார்ட்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top