#body weight : உடம்பு ஐஸ்கட்டி போல உருக வேண்டுமா? இத மட்டும் ஒரு மாசம் பண்ணி பாருங்க - ஒரு கை பாத்தரலாம்!
  • 17:59PM Dec 03,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:59PM Dec 03,2019 Tamil Nadu

நாம் உடல் எடையை குறைக்க பல வகையிலும் முயற்சி செய்கிறோம். ஆனால் நாம் அறியாத சில எளிய முறைகள் நாம் உண்ணும் உணவின் மூலமே உடல் எடையைக் குறைப்பதற்கு உள்ளன. பொதுவாக உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். அத்தகைய கொழுப்புகளை கரைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்போது உடல் எடை குறைவதைக் காணலாம். மேலும் சில எளிய வழிமுறைகளை அடுத்து பார்க்கலாம்.

your image

#1. தாகம் எடுத்தால் சாதாரண தண்ணீரைத் குடிப்பதற்கு பதிலாக, கொஞ்சம் சோம்பு கலந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும். இதனால் உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

#2. அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை மெல்ல மெல்ல குறையும். 

#3. சுரைக்காயானது வயிற்றுச் சதையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலனை தரும்.

#4. இதனை தவிர பப்பாளிக்காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். அதுவும் உடல் எடையை குறைக்கக்கூடியது.

#5. மந்தாரை வேரை நீர்விட்டு கொதிக்க விட வேண்டும். நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை பாதியாக குறைந்து விடும். 

#6. தினமும் குடிக்கும் டீயில் பாலிற்கு பதிலாக சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து பாருங்கள். விரைவில் உடல் எடை மெலிவதை நீங்களே உணரலாம்.

#7. வாழைத்தண்டு சாறு பருகலாம். அதுபோல அருகம்புல் சாறும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

#Body Weight: இதெல்லாம் செய்துவிட்டு இதனை மட்டும் விட்டு விட கூடாது. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top