போற இடத்துக்கு வழி தெரியாம கூகுள் மேப்பில் வழி கேட்டு சிலர் குளத்துக்குள் போன கதை கேட்டிருப்பீர்கள். ஆனால் புது இடத்துக்கு செல்லும் பலருக்கும் காசு கொடுக்காத கைடாக இருப்பது கூகுள் மேப் பகவான் மட்டுமே. உங்கள் மொபைலில் GPS ஆன் செய்து விட்டு, கூகுள் மேப் உதவி உடன் ஒரு லொகேசனை தேடி அலையும் போது, ஒரு பெண் குரல் "டர்ன் லெப்ட்.. டர்ன் ரைட் " என்று உங்களை வழி நடத்தி செல்வதை கேட்டு இருப்பீர்கள். ஆஸ்திரேலியன் ஐ-போனில் வரும் siri-யின் குரலும் இது தான். என்றைக்காவது அந்த குரலின் சொந்தக்காரர் யார் என்று யோசித்தது உண்டா.? எப்படியோ தேடி புடிச்சு நம்ம பசங்க சோசியல் மீடியாவுல வைரலாக்கி விட்டுடாங்க. அவங்க பெயர் " karen jacobsen"னாம். இவர் ஒரு அமெரிக்க பாடகி. இவருக்கு இன்னொரு பெயரும் இருக்கு. வேற என்ன "GPS girl" தான். தனது குரல் வளத்தால் உலகம் பூரா உள்ள மக்களுக்கு "வழிகாட்டி " கொண்டு இருக்கிறார் GPS பெண்.
karen குரலில் அவரது பேட்டி
#GPS girl: ரொம்ப நாளா நிறைய பேரு அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று கூகுளில் வலை வீசி தேடியிருக்கின்றனர். நேரம் இப்போ தான் கொடுத்து வைத்திருக்கும் போல, ஒரு பேட்டியால் வைரலாகி கொண்டிருக்கிறார். | நயனுடன் நெருக்கமாக இருக்கும் இந்த பெண் யாரென்றால்..?? போன மாசம் அப்படி சொல்லிட்டு,இந்த மாசம் நைட்பார்டியா?