#Priyanka : பெண்களுக்கு நமது சமூகத்தில் பாதுகாப்பு ?
  • 10:22AM Nov 30,2019 Hyderabad
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:22AM Nov 30,2019 Hyderabad

தெலுங்கானா மாநிலத்தின்  தலை நகர் ஐதராபாத்தை சேர்ந்த 26 வயதான  கால்நடை மருத்துவர் பிரியங்கா  அங்குள்ள மாதாபூரில்  மருத்துவமனை ஒன்றில்  வேலை செய்து  வந்தார். அவரின் இரவு பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து தனது  வீட்டிற்கு  திரும்பிக் கொண்டிருந்தார் பிரியங்காகுடிபோதையில் இருந்த நாராயன்பேட் பகுதியை சேர்த்த முஹம்மது பாஸாஜோலு நவீன், சென்னகேசவலு. ஜோலு சிவா ஆகியோர் ப்ரியங்காவின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர்,இது தெரியாத செய்வதறியாமல்  பிரியங்கா நாடு ரோட்டில் நிற்க மேற் சொன்ன நான்குபேரும்  அவருக்கு உதவிசெய்வதாக ப்ரியங்காவிடம் சொல்லிருக்கிறார்கள்,அப்பொழுது தனது சகோதரி பவ்யாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டுள்ளார் பிரியங்கா.

priyanga.jpg

பவ்யாவிடம் தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அங்குள்ள சிலர் உதவி செய்வதாக கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரி தயவுசெய்து என்னுடன் சிறிது நேரம் பேசு, அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன். தனக்கு  . பயமாக இருப்பதால்  தனது இரு சக்கர வாகனம்  திரும்பி வரும் வரை தயவுசெய்து பேசிக் கொண்டே இரு என்று  கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பிரியங்காவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கினர்,அப்பொழுது ,ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான  வீடியோவில் அடிப்படையில் லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் உள்பட  4பேரை  போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து லாரி டிரைவர் முகமது பாஷா என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலம்  தான் நாம் மேலே குறிப்பிட்ட சம்பவம்.

priyanga 1.jpg

இந்தியாவில் நிர்பயாவில் (அதற்கும் முன் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் )தொடங்கி அஷிபா,பொள்ளாச்சி சம்பவம்,கோவை சிறுமி ,என்று தொடர்ந்து இன்று தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் அந்த செய்தி கேள்விப்பட்ட அடுத்த நிமிடம் தமிழ்நாட்டில் ரோஜா என்று   பாலியல் பலாத்காரங்களும் கொலைகளும் ,நாம் வாழும் சமூகம் பெண்களுக்கு  பாதுகாப்பா  இருக்கிறதா என்கிற கேள்வியை நம்மில் எழுப்புகிறது,தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்பது உண்மை தான்,அதே போல தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு விதத்தில் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.ஒரு நாய்க்கு வெறி பிடித்தால் அது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்கிற காரணத்தால் அதனை கொலை செய்ய சொல்கிறார்கள் அந்த நாய் எந்த வயதில் இருந்தாலும் அதை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை ,அதே போல இந்த குற்றவாளிகளுக்கு வெறி பிடித்துள்ளது அவர்கள் இந்த சமூகத்தில் வாழ  தகுதியற்றவர்கள்  தான்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top