#Babysitting நாயை பராமரித்துப் பார்த்துக்கொண்டால் 29 லட்சம் சம்பளம்! தங்க சொகுசு வீடு! வேளைக்குத் தயாரா?
  • 20:21PM Nov 30,2019 London
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:21PM Nov 30,2019 London

இந்தியாவில் தற்போது 9 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. ஏகப்பட்ட இளைஞர்கள் எங்கு வேலைகிடைக்கும், எந்த சம்பளத்தில் வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் வளர்ப்பு நாய் ஒன்றை பராமரித்துப் பார்த்துக்கொண்டால் வருடத்திற்கு 29 லட்சம் சம்பளம் மற்றும் தங்குவதற்கு 6 அறைகள் கொண்ட சொகுசு வீடு கொடுக்கப்படும் என்று தம்பதியினர் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

Image result for 29 lakhs for babysitting dog

லண்டன் நைட்பிரிட்ஜ் என்ற பகுதியை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் வளர்க்கும் Milo மற்றும் Oscar என்ற இரண்டு கோல்டன் ரேட்ரிவர் நாய்களை வளர்த்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் வேளைக்கு சென்று வரும் காரணத்தால் இந்த இரண்டு நாய்களையும் சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் இந்த நாய்களை பார்த்து கொள்வதற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளனர். இந்த வேலைக்காக 29 லட்சம் சம்பளம் கொடுப்பது மட்டுமின்றி 6 அறைகள் கொண்ட ஒரு சொகுசு வீடும் கொடுக்கவுள்ளனர்.

Image result for 29 lakhs for babysitting dog

இந்த வேலைக்குச் சேர்பவர்களுக்கு ஒரு கண்டிஷன் மட்டுமுள்ளது, இந்த வேலைக்குச் சேர்பவர்களுக்கு கட்டாயம் இதற்கு முன்பு நாய் பராமரித்த அனுபவம் இருக்க வேண்டும்.மேலும் வீட்டு வேலைகளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கான விளம்பரம் Silver Swan தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடனே பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்த பணிக்கு நீங்கள் தகுதியானவர் எனத் தோன்றினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top