#varma : வர்மாவா? இல்லை ஆதித்ய வர்மாவா?- சபாஷ் சரியான போட்டி !!!
  • 08:02AM Nov 29,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 08:02AM Nov 29,2019 Tamil Nadu

நடிகர் சீயான் விக்ரம் தனக்கு ஒரு பெரிய வெற்றியை தேடித்தந்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்த  என்று விரும்பினார்.தெலுங்கு படமான  அர்ஜுன்ரெட்டி படத்தின் கதை சீயான் விக்ரமிற்கு பிடிக்கவே அதற்கான ரீமேக் உரிமையை பெற்று அந்த  படத்தின் ரீமேக்கை உருவாக்கும் பொறுப்பை இயக்குனர் பாலாவிடம் ஒப்படைத்தார்.வர்மா என்ற பெயரில் இந்த படத்தை எடுத்து வந்தனர்,இதுவரை தனது சொந்தக்கதையை வைத்து மட்டும் படமெடுத்து வந்த இயக்குனர் பாலா, விக்ரமின் அன்புக்கட்டளையை தவிர்க்க முடியாமல் இந்த படத்தின் ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டாலும்வர்மா படத்தை  அதன் மூலப்படமான அர்ஜுன் ரெட்டி  படத்தின் ரீமேக்காக இல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலில் பாலா உருவாக்கியதால் அதிருப்தி அடைந்ததார் நடிகர் சியான்  விக்ரம்.

aav 2.jpg

அதனால் அனைத்து வேலைகளும் முடிந்து திரையிட தயாரான வர்மா படத்தை திரையிடாமல் அதே கதையை அர்ஜுன் ரெட்டி படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனரான கிரிசய்யாவை  வைத்து எடுத்து சமீபத்திலும் அந்தப்படம் ஆதித்ய வர்மா என்கிற பெயரில் வெளியாகி  வெற்றிகரமாக ஒடிக்கொண்டுள்ளது ,இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்ததில்லை என்று தமிழ் திரையுலகமே சற்று ஆடித்தான் போனது.

aav.jpg

ஆதித்ய வர்மா படத்தில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மிக நன்றாக நடித்திருக்கிறார் என பல இடங்களிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்நிலையில்,பெரும்பாலானோர்  வர்மா படத்தில் இயக்குனர் பாலா கொடுத்த நடிப்பு பயிற்சியால் தான்  ஆதித்ய வர்மா  படத்தில் துருவ்வை நன்றாக நடிக்க வைத்து உள்ளதாக தெரிவித்து வருகின்றன,அதேநேரம் இயக்குனர் பாலா இயக்கிய வர்மா  படத்தை பார்த்த ஒரு சிலர், வர்மா திரைப்படம் ஆதித்ய வர்மா திரைப்படத்தைவிட சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும்,அதனால் வர்மா   படத்தையும் வெளியிட்டால்  இரண்டில் எது நல்ல படம் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் கருத்து கூறி வருகின்றனர்.

aav 1.jpg

எனவே  தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆதித்ய வர்மா திரைப்படம் அனைத்து தியேட்டர்களில் இருந்து எடுத்த பின்னர் வர்மாவை திரையிட நடிகர் சியான் விக்ரம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே திரைப்படத்தின் ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் வகைகளின் ஸ்டைலில் வெவ்வேறு விதமாக இயக்கி, அந்த இரண்டு படத்தையும் ரிலீஸ் செய்வது என்பது  இதுதான் முதல் முறை  என்பதால் வர்மா படம் எப்போது திரைக்கு வருமென்று  ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top