#hiring: மத்திய அரசு உத்தியோகம்! தட்டச்சு தெரிந்திருந்தால் எளிதில் வாய்ப்பு!
  • 21:48PM Nov 29,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:48PM Nov 29,2019 Chennai

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி தொடர்பான விபரங்கள் பின்வருமாறு,

#1. கல்வித்தகுதியாக, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்  ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

#2. Upper Division Clerk (Group "C") பணிக்கு ஊதியமானது மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம்.இதற்கு  ஏதேனும் ஓர் துறையில் பட்டபடிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#3. Lower Division Clerk (Group "C") பணிக்கு  12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றதுடன்  இங்கிலீஷில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள்  அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

#4. மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
குறிப்பிட்ட வகுப்பினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

#5. தேர்வு செய்யப்படும் முறையானது, முதலில் எழுத்துத் தேர்வு பின்னர்  தட்டச்சு செய்யும் திறன் இவற்றில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

#hiring,  www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 19.12.2019 ஆகும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.#nowhiring:விரிவுரையாளர் பணிக்கு ஒரு லட்சம் வரை ஊதியம்! காத்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாய்ப்பு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top