#whatsup: வாட்சப் பயன்படுத்துபவரா நீங்க? சற்று அசந்தால் உங்களை உளவு பார்க்க காத்திருக்கும் தொழில்நுட்பங்கள்! அடிப்படையாக அறிந்துகொள்ள வேண்டியது!
  • 20:19PM Nov 29,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:19PM Nov 29,2019 Chennai

mobile whatsup ஆப்பை கம்பியூட்டர்  மூலமாக அணுகுவதற்கு whatsapp web என்ற Application உதவுகிறது. இந்த அப்ளிகேஷனை நேரடியாக download செய்து பயன்படுத்தலாம் அல்லது browser மூலமாக  whatsapp இணையதளத்தில்வழங்கப்பட்டுள்ள web  வசதியைப் பயன்படுத்தி கணினியில் நிறுவாமல் பயன்படுத்தும் அம்சமும் இதில் உள்ளது. இந்தமென்பொருளை கொண்டுள்ள கம்பியூட்டர் அல்லது  browser இல் உள்ள பாதுகாப்புகுறைபாடுகளைப் பயன்படுத்தி ஸ்கேமர்கள், ஹேக்கர்கள் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்க்கக் கூடும்.இதுமட்டுமா இது போல பல போலியான செயலிகள் உள்ளன,இதன் மூலம் தவறுதலாக அவற்றைப் டவுன்லோடு செய்து பயன்படுத்தினாலும் உங்கள் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

whatsup இல் உள்ள பாதுகாப்பு  அம்சமான அனுப்புபவர் பெறுபவர் மட்டுமே திறக்கும் வகையில் end-to-end encryption பயன்படுத்தப்படுகிறது. இதுபாதுகாப்பானது. அதே நேரம்  உங்களது கைபேசி தொலைந்துபோனாலோ, உடைந்துபோனாலோ, பழுது ஏற்பட்டாலோ whatsup  தகவல்களை மீட்க android இல்  google drive backup  வசதியும், iphone இல்  icloudபேக்கப் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த backup-களில் பதிவேற்றப்படும் whatsup  தகவல்களைபாதுகாக்க whatsup பொறுப்பேற்பதில்லை. 

google drive அல்லது icloud  அக்கவுண்டுகளில்  login செய்யப்பட்ட computer அல்லது  phone மூலமாக எளிதில் அணுக முடியும் என்பதால் அதில் backup  செய்யப்பட்ட whatsup  தகவல்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியே என்பது தொழில்நுட்ப நிபுணர்களின்  கருத்து. எனவே google drive அல்லது icloud  பயன்படுத்தி பேக்கப் செய்பவர்கள் வேறு போன்களில்  gmail திறந்து பயன்படுத்திய பின் அதனை முழுமையாக logout செய்து வெளியேறி விட்டோமா என்பதை உறுதிப்படுத்தவும். ஃபோனை இழக்க நேரிட்டால் அந்த போனில் உள்ள whatsup மற்றும் gmail ,  icloud  கணக்குகள் செயல்படாவண்ணம் முடக்குவதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.whatsup  பயன்படுத்துபவர்கள் அடிக்கடி update வந்துள்ளதா என்பதை play store இல்  பார்த்து பதிவிறக்கிக் கொள்ளவும் அல்லது automatic update settings அமைத்துக் கொள்ளவும். மேற்கண்ட  பிரச்சனைகளின் போது உங்கள் whatsup செயலி சிக்கலுக்குள்ளாவதைத் தவிர்க்க இது  உதவும். #Xiaomi: உள்ளங்கை அளவு மட்டுமே உள்ள இது என்ன தெரியுமா? ஐந்து நொடிகளில் உடலின் உஷ்னத்தையே மாற்றும் வித்தை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top