#SitioPariahan வருடாவருடம் 4 செ.மீ. கடலில் முழுகும் பிலிப்பைன்ஸ் கிராமம்!
  • 20:03PM Dec 02,2019 Philippines
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:03PM Dec 02,2019 Philippines

வரும் 2050-ம் ஆண்டிற்குள் சென்னை, விசாகபட்டணம் போன்ற நகரங்கள் கடலில் முழுகும் என்ற அதிர்ச்சி செய்தி அண்மையில் வெளியாகியது. சென்னைவாசிகள் பலரும் இந்தச் செய்தியை கேட்டு அதிர்ந்தனர். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோரத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்று வருடாவருடம் 4 செ.மீ. கடலில் முழுகிவருகிறது.

#kuldhara ராஜஸ்தானின் பேய் கிராமத்தில் தீரன் திரைப்பட இரவு காட்சிகளை எப்படி எடுத்தனர்?

Image result for Sitio Pariahan

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது Sitio Pariahan கிராமம். ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்தக் கிராமம் தற்போது கடலில் மிதக்கும் கிராமமாக மாறியுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள சில கிராமங்கள் முழுகிவருவதாகக் கூறப்படுகிறது, அந்த வகையில் Sitio Pariahan கிராமம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு முழுகிவருகிறது. இந்தக் கிராமத்தில் எந்த வசதியும் கிடையாது!

Related image

இந்தக் கிராமத்தின் பாதிச் சாலை நீரில் முழுகிவிட்டதால், மின்சார இணைப்பு கொடுக்கமுடியவில்லை. இங்குள்ளவர்கள் சூரிய மின்சக்தி மூலமே மின்சாரம் பெறுகின்றனர். இங்குள்ளவர்களுக்கு ஒரே ஒரு கிணறுதான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. குடிக்க, குளிக்க, சமையல் என அனைத்திற்கும் இந்தக் கிணற்று நீரையே கிராமமக்கள் நம்பியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட புயலில் இந்தக் கிராமத்தில் இருந்த கோர்ட்டும், தேவாலயமும் அழிந்தது. இந்தக் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், இதனால் இவர்கள் மற்ற கிராமங்களுக்கு இடம்பெயருவதைத் தவிர்த்து இங்கயே இன்னல்களைச் சமாளித்துத் தங்கி வருகின்றனர். ஆனால் இந்தக் கிராமம் விரைவில் முழுமையாகக் கடலில் மூழ்கிவிடும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குள் இந்தக் கிராமமக்கள் இடமாறவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top