Handsome and Terrific Villains of Tamil Cinema - Part 2
  • 19:04PM May 24,2018 Kodambakkam, Chennai, Tamil Nadu, India
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:04PM May 24,2018 Kodambakkam, Chennai, Tamil Nadu, India

கத்தி – CHIRAG

Neil nitin mukesh kathi.jpg

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் இளையதளபதி விஜய் அவர்கள் இரு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் “கத்தி”. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன் ஒரு “கதை மோசடி” வழக்குகளில் சிக்கி, பிறகு திரையிடப்பட்டது. “கார்பரேட்” ஆதிக்கத்தின் மொத்த உருவமாக இந்த படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும், அந்த ஸ்டைலான வில்லன் கதாப்பாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார் ஹிந்தி திரைப்பட நடிகர் “நெயில் நித்தின் முகேஷ்”.

துப்பாக்கி – SLEEPER CELL’S UNNAMED LEADER

vidyut jamwal thuppaki.jpg

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நடிகர் இளையதளபதி விஜய் அவர்கள் ராணுவ வீரனாக முதன் முதலில் நடித்த திரைப்படம் “துப்பாக்கி”. நாட்டை அளிக்க முற்படும் தீவிரவாதிகளை பல தமிழ் திரைப்படங்களில் கொடூரமாக சித்தரித்திருபார்கள், ஆனால் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் இந்த படத்தின் வில்லனாக வரும் “ஸ்லீப்பர் செல்” தலைவனை, கையில் “க்ரீன் டீயூடன்” அறிமுகப்படுத்தியிருப்பார். சிக்ஸ் பேக் ஸ்மார்ட் வில்லனாக நடிகர் “வித்யூத் ஜாம்வால்” நடித்திருந்தார்.

மங்காத்தா – VINAYAK MAHADEV

Ajith mangatha.jpg

நடிகர் அஜித் குமார் “வாலி” “அசோகா” திரைப்படங்களுக்கு பிறகு ஒரு ANTI-HERO வாக நடித்த திரைப்படம் “மங்காத்தா”. இந்த படத்தில் முழு நீல வில்லனாக நடித்திருந்தும் நடிகர் அஜித் தனது ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகர் “தல” அஜித் குமார் அவர்கள் தனது மாஸ் மற்றும் ஸ்டைலை கொஞ்சமும் குறைக்காமல் பணத்திற்காக எதையும் செய்ய துணியும் ஒரு கெத்தான காவல் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம் – CHRISTIAN FLETCHER

Dasavatharam(2008)-2.jpg

நடிகர் உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்கள் முதன் முதலில் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்த முதல் திரைப்படம் 2008 ல் திரைக்கு வந்த “தசாவதாரம்” திரைப்படம். ஒரு நடிகன் ஒரே மேடையில் ஒரே படத்திற்காக, சிறந்த ஹீரோ விருதையும், சிறந்த வில்லன் விருதையும் வாங்கியது நடிகர் கமல் ஹாசன் தான். அதும் இந்த “தசாவதாரம்” படத்திற்காகதான். இந்த படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான “கிறிஸ்டியன் ஃபிளட்ச்சர்” எனும் கதாப்பாத்திரம் ஸ்டைலான மற்றும் கொடூரமான வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசை - MAJOR MADHAVAN

pr aasai 10.jpg

கடந்த 1995 ஆம் வருடம் இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த வித்தியாசமான திரைப்படம் “ஆசை”. நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருப்பார். ஸ்மார்ட்டாக அடுத்தடுத்து குலைகளை சாதாரணமாக செய்யும் ஒரு ராணுவ மேஜராக பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Top