#Breastfeeding: குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்துவது எப்படி?
  • 16:31PM Nov 30,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:31PM Nov 30,2019 Kodambakkam

இந்த காலத்தில் குழந்தை பெற்ற பிறகு தாய்மார்கள் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில் சுகப்பிரசவம் ஆகாமல் சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சரியான பராமரிப்பு இல்லை என்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். இதையெல்லாம் தாண்டி தாய்மார்கள் தங்களது குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். சராசரியான ஒரு குழந்தைக்கு ஒன்று அல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்தால் போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிலர் இரண்டு வயதிற்கு மேல் தாய்ப்பால் கொடுக்கின்றனர். அந்த குழந்தைகளும் தாய்ப்பால் குடிப்பதில் சுகம் கண்டு அதை மறக்க முடியாமல் அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றது. தாய்ப்பாலுக்காக குழந்தை ஏங்கி அழும் போது எந்த தாயால் தான் மறுக்க முடியும். ஆனால் தாய்ப்பாலை நிறுத்துவது கடினமான காரியமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது தாயிற்கும் சேயிற்கும் நல்லது அல்ல. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்தொடர்ந்தால் எளிமையாக குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிடலாம்.

3.jpg

நாம் எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல தாய்ப்பால் சுரப்பதை குறைக்கவும் முடியும். புரதம் நிறைந்த உணவுகளை தாய்மார்கள் எடுத்துக் கொள்வதனை குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையுமாம். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் தாய்ப்பால் குறைய வாய்ப்புள்ளது.

3b.jpg

தவழும் குழந்தைகளுக்கு படிப்படியாக தாய்ப்பாலைக் குறைத்தால் தாய் சேய் இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் உடலில் சில உபாதைகள் ஏற்படுமாம். அப்படி செய்வதனால் தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்துமாம். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் சமாளிக்கலாம்.

3c.jpg

இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம். குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தைப் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்ற நினைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3d.jpg

மல்லிகைப் பூவை மார்பகத்தில் சுற்றிக் கொள்வதனால் தாய்ப்பால் சுரப்பது குறையும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இது நிரூபிக்கப்படாத ஒன்று. அதிகப்படியான மல்லிகை வாசம் குழந்தைக்கு மயக்கத்தை தரும் எனது குறிப்பிடத்தக்கது. இரண்டு வயதிற்கு மேல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் சில சத்துள்ள உணவுகளை சாப்பிட மறுக்கின்றனர். அதனால் தேவையான ஊட்டச்சத்தை குழந்தைகளுக்கு தர முடியாமல் போகிறது. தாய்ப்பாலை படிப்படியாக குறைத்து மற்ற நல்ல உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். அது தான் தாயிற்கும் சேயிற்கும் நல்லது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top