#Mobile Addiction: மொபைலுக்கு அடிமையாகிவிட்டீர்களா? மொபைல் காட்டும் உலகத்தைவிட நிஜ உலகம் ரொம்ப பெருசு!!!
  • 11:41AM Dec 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:41AM Dec 03,2019 Kodambakkam

மொபைல் என்பது இந்த காலத்தில் அத்தியாவசய தேவைகளில் ஒன்று தான் ஆனால் அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் நாம் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்கிறதே! ஆராம்பத்தில் மொபைல் ஃபோன்களை பேசுவதற்கும், மெசேஜ் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். தப்பித்தவறி அந்த பிளே ஸ்டோருக்குள் சென்றுவிட்டால் அவ்வளவு தான். பிறகு மொபைல் நமது மூன்றாவது கையைப் போல ஆகிவிடும். இன்னும் சிலருக்கு சாப்பிட மறந்தாலும் கையேடு மொபைல் ஃபோன் வைத்துக்கொள்ள மறப்பது இல்லை. சில மனைவிகளின் முதல் எதிரியே அவர்களது கணவன்மார்களின் ஸ்மார்ட் ஃபோன் தான். சரி இந்த அடிமைத்தனத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்வது எப்படி வாங்க பார்க்கலாம்.

4.jpg

சாதாரணமாகவே மொபைல் ஃபோன்கள் நமது பல சுவாரஸ்யமான விஷயங்களை அழித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு வாட்ச் கட்டுவது, இப்போதெல்லாம் யாரும் வாட்ச் கட்டுவது இல்லை காரணம் மொபைலில் டைம் காட்டுவதனால், இன்னும் கால்குலேட்டர், அலாரம், கடிதம் அனுப்பி பெறுவது, டேப் ரெக்கார்டர், வாக் மேன், வீடியோ கேம் இப்படி பல அறிய சாதனங்கள் இன்று இல்லாமல் போய்விட்டது. ஏன் சில ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தால் போதும் கம்பியூட்டரே உங்களுக்குத் தேவைப்படாது. இதனால் தான் புத்தகமும் கையுமாக இருந்த மாணவர்கள் இருபத்தி நான்கு மணி நேரங்களும் ஃபோனும் கையுமாக இருக்கின்றனர்.

3.jpg

மேலும் உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க இருக்கவே இருக்கிறது ஃபேஸ் புக், டுவிட்டர், யூடியுப், வாட்ஸ் அப். இவைகள் ஆப்கள் இல்லை நம்மை நாசமாக்கும் ஆப்புகள் என்று தான் கூற வேண்டும். இவைகளை பயன்படுத்த இணைய சேவை கண்டிப்பாக தேவை. இந்த ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை பார்ப்பதற்காக நாம் மொபைலில் இண்டர்நெட்டை ஆன் செய்து வைத்திருப்போம். எப்போதும் நெட்டை ஆன் செய்யாமல் தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்துகொண்டால் போதுமானது. மொபைல் வாங்கிய பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் யூஸ் செய்வதற்கான முக்கியமான காரணம் அவர்கள் போட்டு வைத்திருக்கும் அதிகப்படியான “நெட் பேக்” தான். ஒன்றரை ஜிபி நெட்டை முற்றிலுமாக பயன்படுத்திக் கொள்ளவே தொடர்ந்து மொபைலை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். பிறகு ஒரு நேரத்தில் ஒன்றரை ஜிபி போதாமல் போகிறது. இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலேயே போதும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top